நயன்-விக்கி திருமணத்தைப் பார்க்க 700 கி.மீ. தூரம் பைக்கிலேயே வந்த 4 மாத கர்ப்பிணி
நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் நேற்று கோலாகலமாக நடந்தது.
நயன்தாரா - விக்னேஷ்
திருமணம் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நேற்று காலை நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
பிரபலங்கள் பங்கேற்பு
இத்திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கலா மாஸ்டர், விஜய்சேதுபதி, நெல்சன், அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். திருமணத்தில் செல்போன்களுக்கு அனுமதியில்லை என பல்வேறு பலத்த கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
புகைப்படங்கள் வைரல்
திருமணத்தின் புகைப்படங்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் நேற்று இணையத்தை சுற்றி வலம் வந்தது. ரசிகர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு டுவிட்டர், இன்ஸ்டா, தனது செல்போனில் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
4 மாத கர்ப்பிணி பயணம்
இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தைப் பார்க்க 4 மாத கர்ப்பிணி தனது கணவருடன் கேரளாவிலிருந்து 700 கி.மீ தூரம் பைக்கில் பணம் செய்துள்ளார். இருவரையும் திருமணத்தை பார்க்க அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் இருவரும் திரும்பி சென்றனர்.