திருமணம் முடிந்த கையோடு திருப்பதி..செல்லும் நயன் - விக்னேஷ் ஜோடி!
திருமணம் முடிந்த கையோடு திருப்பதி செல்ல நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நயன் - விக்கி திருமணம்
கோலிவுட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நயன் - விக்கி திருமணம் மாமல்லபுரம் அருகே கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடைபெற்றது.
அங்கு திருமணத்துக்காக பிரத்யேகமாக விசேஷ கண்ணாடி மாளிகை போன்று அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறும் பகுதியில் அனைத்து இடத்திலும் 80க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
திருப்பதி
இந்த திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அவரது மனைவியுடன் கலந்து கொண்டார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், நடிகர் ஜெயம்ரவி, இயக்குநர் மோகன் ராஜா, கலா மாஸ்டர், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நடிகை சரண்யா பொன்வண்ணன்,
பொன்வண்ணன், இயக்குநர் சிவா, கேமராமேன் வெற்றி, தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, நடிகர் வசந்த், நடிகர் சரத்குமார், நடிகர் விஜய்சேதுபதி தனது மகளுடன் கலந்து கொண்டார்.
மேலும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, இயக்குநர் கௌதம் மேனன் ஆகிய முக்கிய திரையுலக பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில், திருமணம் நடந்த தனியார் நட்சத்திர விடுதியில் இருந்து நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் திருமணத்தை திருப்பதியில் நடத்த விரும்பி, சில காரணங்களுக்காக திருமண இடம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.