யாருடா அது... நயன்தாராவைப் பார்த்து ‘செம்ம க்யூட்டா இருக்கீங்கன்னு’ கத்துன ரசிகர் - வைரல் வீடியோ...!
விக்னேஷ் சிவன் அருகில் இருக்க நயன்தாராவை பார்த்து செம்ம க்யூட்டா இருக்கீங்கன்னு ரசிகர் ஒருவர் கத்துன வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
‘செம்ம க்யூட்டா இருக்கீங்கன்னு’ கத்துன ரசிகர்
ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த ‘கனெக்ட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது கனெக்ட் படத்தின் ப்ரீமியர் நிகழ்ச்சிக்காக தியேட்டருக்கு வந்தார். தியேட்டரில் படம் பார்க்க வந்த நடிகை நயன்தாராவை ரசிகர்கள் திடீரென சூழ்ந்து கொண்டனர்.
ரசிகர்களின் அன்பு மழையில் நனைந்த நயன்தாரா புன்னகைத்தும், அவர்களுக்கு கையசைத்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு ரசிகர் நயன்தாரா 'செம்ம க்யூட்டா இருக்கீங்க...’ என்று கத்த அதற்கு நயன்தாரா Thank You என்று கொடுத்த வீடியோ டிரெண்டாகி வருகிறது.