விரைவில் அம்மாவாகப் போகும் நயன்தாரா...? சூசகமாக சொன்ன விக்னேஷ் சிவன்

Nayanthara Vignesh Shivan Viral Photos
By Nandhini 2 மாதங்கள் முன்

தற்போது சமூகவலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. 

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ்

நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணத்திற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர்.

திருமணத்துக்கு பிறகு இந்த ஜோடி 2 தடவை வெளிநாட்டுக்கு ஹனிமூன் சென்று வந்தனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தன் குடும்பத்தினரோடு துபாய் சென்றிருந்தார்.

திருமணத்துக்கு பிறகு அவர்கள் கொண்டாடிய முதல் பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளில் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளோடு விளையாடுகின்றனர்.

அந்த புகைப்படத்தில் ‘குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம்’ என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், ஒருவேளை நயன்தாரா கர்ப்பமாக இருப்பதை தான் இப்படி சூசகமாக சொல்கிறாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

nayanthara-vignesh-shivan-viral-photo