என்னா லவ்... - அரவணைத்து நயன்தாராவிற்கு உணவை ஊட்டிவிட்ட விக்னேஷ் - க்யூட்டான வீடியோ - ரசிகர்கள் மகிழ்ச்சி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும்,இயக்குநர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் அண்மையில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. நடிகை நயன்தாரா கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பபேஷ்வரர் ஆலயத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் முடிந்தவுடன் மங்களம் யானையிடம வாழைப்பழம் கொடுத்து அசி பெற்றார். அப்போது யானைக்கு வாழைப்பழம் கொடுப்பதற்கு நடிகை சின்ன குழந்தை போல் பயந்த காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியம் அடைய வைத்தது.
இந்நிலையில், தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், டேபிள் நிறைய வகை, வகையான உணவுகள் இருக்கின்றன. அப்போது, விக்னேஷ் சிவன், நயன்தாராவிடம் இந்த உணவு வேண்டுமா என்று கேட்கிறார். அதற்கு நயன்தாரா வேண்டாம் என்று சொல்கிறார். கைகளை காட்டி இது வேண்டுமா.. அது வேண்டுமா.. என்று கேட்க, நயன்தாரா மறுக்க, பின்னர் விக்னேஷ் புரிந்து கொண்டு தான் சாப்பிட்ட தட்டிலிருந்து உணவை எடுத்து நயன்தாராவிற்கு ஊட்டி விடுகிறார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் அடடா... என்ன அழகு... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -