எலும்பும், தோலுமாக மாறிய நயன்தாரா - வெளியான புகைப்படம் - ரசிகர்கள் அதிர்ச்சி

nayanthara viral-photo vignesh-shivan
By Nandhini Apr 01, 2022 10:47 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ‘நானும் ரௌடி தான்’ படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார்.

கடந்த 6 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் டிடிக்கு அளித்த பேட்டியில், நடிகை நயன்தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூறினார்.

இதனால், இந்தாண்டு அவர் திருமணம் செய்வார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் ஒன்றுக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வந்தனர். அப்போது, நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்து கோவிலுக்கு வந்ததால், இவர்கள் இருவருக்குள்ளும் ரகசியத் திருமணம் நடந்து விட்டதா? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில், நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் விக்னேஸ் சிவனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். நயன்தாரா மெலிந்து எலும்பும், தோலுமாக இருப்பதை பார்த்த அவரது ரசிகர்கள், இது நயன்தாரா... ஏன் இப்படி ஆயிட்டார்.. என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் -   

You May Like This