இரட்டை குழந்தை விவகாரம் : அப்பாவாகிட்டேனு இன்னும் சிங்க் ஆகல... - மனம் திறந்த விக்னேஷ் சிவன்...!

Nayanthara Vignesh Shivan
By Nandhini Dec 14, 2022 12:43 PM GMT
Report

அப்பாவாகிட்டேனு இன்னும் சிங்க் ஆகல என்று விக்னேஷ் சிவன் மனம் திறந்து பேசியுள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

தமிழ் சினிமாத்துறையில் சலசலப்பு

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக்கொண்ட சம்பவம், தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பும், சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பேசும்பொருளாக மாறியது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் சில சட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் நடிகை நயன்தாரா இந்த விசயத்தில் அனைத்து விதிகளையும் மீறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

nayanthara-vignesh-shivan-twins-baby-problem

அப்பாவாகிட்டேனு இன்னும் சிங்க் ஆகல

தந்தையானது குறித்து ஒரு சேனலில் விக்னேஷ் சிவன் மனம் திறந்து பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், தந்தையானதை இன்னும் நம்ப முடியவில்லை. கனவு போல உள்ளது. இது கடவுளின் ஆசீர்வாதம். நான் தந்தையாகிவிட்டேன் என்பதே இன்னும் முழுவதுமாக சிங்க் ஆகவில்லை. குழந்தைகளுடன் இருப்பது சந்தோஷமாக உள்ளது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் குழந்தைகளுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.