நயன்தாராவுடன் நட்பு இருந்தால் தானே பிரச்சனை வர... யாரா இருந்தா எனக்கென்ன - நச்சென்ன பேசிய த்ரிஷா..!
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை த்ரிஷா. அன்றிலிருந்து இன்று வரை இவர் இளமையாகவே இருந்து வருகிறார்.
சமீபத்தில், நடிகை த்ரிஷா பேட்டி ஒன்றில் நயன்தாரா குறித்து பேசியது தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நயன்தாராவுக்கும், த்ரிஷாவுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவதாக பேசப்பட்டு வருகிறது.
யாரா இருந்தா எனக்கென்ன?
‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கதீஜா கதாபாத்திரத்திற்கு முதலில் த்ரிஷாவை தான் நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்தார். ஆனால், த்ரிஷா வேண்டாம் என்று நயன்தாரா கறாரா சொல்லிவிட்டாராம்.
இதனையடுத்து, சமந்தாவை நடிக்க வைத்துள்ளார் நயன்தாரா என்று தகவல் வெளியானது.
இது குறித்து அந்த பேட்டியில் த்ரிஷா பேசுகையில்,
த்ரிஷாவா, நயன்தாராவானு நான் பார்ப்பது கூட கிடையாது. ரசிகர் அவர்களுக்கு பிடித்த நடிகைகளுக்காக மட்டும்தான் போராடுவார்கள். ஆரோக்கியமான போட்டியாக இருந்தால் சரி. ஒருத்தர் காலை வார வேண்டாமே. 2 பேரையும் பாராட்டலாமே.
2 பேருமே டாப்பில் இருக்கலாமே. எனக்கும், நயனுக்கும் இடையே ஆரோக்கியமான போட்டி தான் இருக்கிறது. நயன்தாராவை விருது விழாவில் சந்திப்பேன். அப்படியே பேசினால் கூட சினிமா பற்றியெல்லாம் பேச மாட்டோம். நயன்தாரா உள்பட எந்த நடிகையுடனும் எனக்கு நெருக்கமான நட்பு கிடையாது.
நட்பு இருந்தால் தானே பிரச்சனை வரும். அவர்கள் பேசாமல் போனால் எதற்கு வருத்தப்படணும். ஆனால் எனக்கு தான் யாருடனும் அந்த அளவுக்கு நெருக்கமான நட்பே கிடையாதே.
நடிக்க வந்த இடத்தில் போட்டியும் கிடையாது. நட்பும் கிடையாது. அதனால் எந்த பாதிப்பும் எனக்கு இல்லை என்றார்.