நயன்தாராவால் குழந்தை பெற்றுக்கொள்ளவே முடியாது - பகீர் கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் ‘நானும் ரௌடி தான்’ படத்தில் நடித்த போது அப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். கடந்த 6 வருடங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் டிடிக்கு அளித்த பேட்டியில், நடிகை நயன்தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூறினார். இதனால், இந்தாண்டு அவர் திருமணம் செய்வார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் ஒன்றுக்கு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வந்தனர். அப்போது, நயன்தாரா நெற்றியில் குங்குமம் வைத்து கோவிலுக்கு வந்ததால், இவர்கள் இருவருக்குள்ளும் ரகசியத் திருமணம் நடந்து விட்டதா? என்று ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
தற்போது, இவர்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா, இல்லையா என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும் நிலையில், நயன்தாரா கூடிய விரைவில் வாடகை தாய் மூலமாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இனி நயன்தாராவால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறுகையில், நயன்தாராவுக்கு வயதாகிவிட்டது. அதனால் அவரால் இனிமேல் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. நயன்தாராவை தேடி பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே, அவர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்ப மாட்டார். அதனால்தான் அவர் வாடகை தாய் முறையை தேர்வு செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.