நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு விரைவில் டும்..டும்..டும்..? - ரசிகர்கள் கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள். நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர். ரசிகர்கள் எப்போது உங்கள் திருமணம் என்று கேள்வி கேட்டுக்கொண்டும் வருகிறார்கள். பல கோவில்களுக்கு அவ்வப்போது இந்த காதல் ஜோடி செல்வது வழக்கம். சமீபத்தில் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்குச் சென்று வந்தனர். இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில், சென்னை, பாரீஸில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் இன்று காலையில் இருவரும் சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நயன்தாரா வீட்டில் இரு குடும்பத்தினர் முன்னிலையில் எளியமுறையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. விரைவில் திருமணத் தேதியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ரசிகர்கள் பல ஆண்டுகளாக கேட்டு வந்த கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கப்போகிறது.