விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் என்ன பண்றாங்க பாருங்க - வெளியான புதிய புகைப்படம்

Actressnayanthara directorvigneshshivan
By Petchi Avudaiappan Oct 19, 2021 06:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் நயன்தாரா ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்திலும், விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்து வாக்குல இரண்டு காதல் படத்திலும் நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி படத்தை நயனின் காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். 

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்று வழிபட்டுள்ளனர். அதோடு, மும்பையிலுள்ள சித்தி விநாயகர், மஹாலட்சுமி கோவில், மும்பதேவி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளனர்.

இதன் புகைப்படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.