இதுக்கெல்லாம் சிம்பு தான் காரணம்... - திருமணத்திற்கு பின் சீக்ரெட்டை போட்டுடைத்த விக்னேஷ் - ஷாக்கான ரசிகர்கள்

Silambarasan Nayanthara Vignesh Shivan
1 வாரம் முன்

கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

நயன்தாரா - விக்னேஷ்

திருமணம் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.

இதுக்கெல்லாம் சிம்பு தான் காரணம்... - திருமணத்திற்கு பின் சீக்ரெட்டை போட்டுடைத்த விக்னேஷ் - ஷாக்கான ரசிகர்கள் | Nayanthara Vignesh Shivan Silambarasan

பிரபலங்கள் பங்கேற்பு

இத்திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கலா மாஸ்டர், விஜய்சேதுபதி, நெல்சன், அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

மறுவீடு சென்ற விக்னேஷ்

திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

போடா போடி படம்

போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு நாயகனாக நடித்திருந்த இப்படம் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக அமைந்தது.

இதுக்கெல்லாம் சிம்பு தான் காரணம்... - திருமணத்திற்கு பின் சீக்ரெட்டை போட்டுடைத்த விக்னேஷ் - ஷாக்கான ரசிகர்கள் | Nayanthara Vignesh Shivan Silambarasan

சிம்பு தான் காரணம்

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவன், சிம்பு குறித்து பேசியது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த பேட்டியில் விக்னேஷ் கூறுகையில், எனக்குள் இருக்கும் பாடலாசிரியர் திறமையை தூண்டிவிட்டது சிம்பு தான். ‘போடா போடி’ படத்தின் போது சிம்பு பாடல் வரிகளை எழுதும்போது, தன்னிடமும் ஏதாவது 2 வரிகளை எழுதச் சொல்வார். அப்படி அவர் கொடுத்த நம்பிக்கை தான் இப்போது என்னால் சிறந்து விளங்க முடிகிறது என்று விக்கி கூறினார். 

தற்போது இந்த பேட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.