நயன்தாராவுக்கு வாடகைத் தாய் ஐடியா கொடுத்ததே இந்த நடிகர்தானாம்... - தீயாய் பரவும் தகவல்...!
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் கலாச்சாரம் பாலிவுட்டில் பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் இந்த கலாச்சாரம் பரவி உள்ளது. நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இந்த முறை மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இரட்டை குழந்தை
திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், நேற்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அந்த பதிவில், இரட்டை குழந்தைக்கு நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று புகைப்படத்தோடு வெளியிட்டார். மேலும், பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிர்வாதமும் எங்களுக்காக வேண்டும் என்று பதிவிட்டிருந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாராவுக்கு ஐடியா கொடுத்த நடிகர்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு இந்த வாடகைத் தாய் ஐடியாவை கொடுத்ததே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது, அட்லி இயக்கத்தில் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் ஹீரோ நடித்து வருகிறார். அப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு நடிகர் ஷாருக்கான் கலந்து கொண்டார்.