நயன்தாரா - விக்னேஷ் சிவன் உறவில் விரிசலா? காரணம் இது தானா?
நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சர்ச்சையில் சிக்கிய நயன் - விக்கி
ஏழு வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் மாதம் திருமண செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகு குறிப்பிட்ட சில மாதங்களில் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
இவர்களின் இந்த இரட்டை குழந்தை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஒருவழியாக அந்த சர்ச்சையிலிருந்து மீண்டனர்.
இருவருக்கும் இடையே உரசலா?
இதை தொடர்ந்து ஏகே 62 படத்திற்கான வேலையில் இறங்க தயாராக காத்திருந்த நிலையில் ஒரு வித பிரச்சனைகளால் அந்தப் படமும் கை நழுவி போனது.
விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா லைக்கா நிறுவனத்திடம் போராடியும் ஒன்றும் நடக்கவில்லை. இருந்தாலும் விக்னேஷ் சிவன் தரப்பில் இருந்து எதிர்மறையான கருத்துக்கள் இதுவரை வரவில்லை.
அந்த பிரச்சனையை மிகவும் கூலாக சமாளித்தார்.
இந்த நிலையில் வெளியில் இருந்து விக்னேஷ் சிவன் மற்றும் நயனுக்கு பெரிய பிரச்சினையை கிளப்பி வருகின்றனர். அதாவது இருவருக்கும் இடையில் ஏதோ உரசல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.