நெற்றியில் குங்குமமிட்டு, கணவன், இரு குழந்தைகளுடன் பொங்கல் விழா கொண்டாடிய நயன்தாரா...!

Nayanthara Thai Pongal Vignesh Shivan
By Nandhini Jan 16, 2023 03:09 PM GMT
Report

நெற்றியில் குங்குமமிட்டு, கணவன், இரு குழந்தைகளுடன் பொங்கல் விழா கொண்டாடிய நயன்தாராவின் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

nayanthara-vignesh-shivan-pongal-celebration

கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்-விக்கி

கடந்த மாதம், நடிகை நயன்தாராவும், கணவர் விக்னேஷ் சிவனும் தன் இரு மகன்களுடன் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

தன் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நயன்தாரா

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், நெற்றில் குங்குமமிட்டு தன் குடும்பத்துடன் பொங்கல் விழாவை நயன்தாரா கொண்டாடியுள்ளார்.

தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.