திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தரிசனம் : திருமண தேதி விரைவில் வெளியாகிறது
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. அதேசமயம் கோலிவுட்டில் உள்ள காதல் ஜோடிகளில் முக்கியமானது விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி.
இவர்கள் எங்கு சென்றாலும் அவர்களிடம் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி உங்களுக்கு திருமணம் எப்போது என்பதுதான்.
அந்த அளவிற்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை எதிர்நோக்கி அவரது ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை விஐபி தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த அவர்களுக்கு ரங்கநாயக மண்டபத்தில் வேதங்கள் முழங்க தேவஸ்தான பிரசாதம் வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்து அவர்களுடன் ரசிகர்கள் ஆவலுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
முன்னதாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நயன்தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக அறிவித்தார்.
இதனால் அவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்.#Nayanthara @VigneshShivN pic.twitter.com/8AwgCZYNFL
— Anandakumar M (@AnandAathiraa) September 27, 2021