கல்யாணத்திற்கு பிறகு கன்னங்கள் பூசி அழகில் ஒளி வீசும் நயன்தாரா - லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்து வியந்த ரசிகர்கள்
கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.
நயன்தாரா - விக்னேஷ்
திருமணம் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
பிரபலங்கள் பங்கேற்பு
இத்திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கலா மாஸ்டர், விஜய்சேதுபதி, நெல்சன், அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
மறுவீடு சென்ற விக்னேஷ்
திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
அழகில் ஒளிவீசும் நயன்தாரா
தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் திருமணம் முடிந்த பிறகு நயன்தாரா முகத்தில் கல்யாண பூரிப்பு வந்து விட்டதாக தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ வெளியானது. அப்படத்தில் மிகவும் ஒல்லியா, மெலிந்து போய் எலும்பும் தோலுமாக இருந்த நயன்தாரா, திடீரென்று கல்யாணத்தில் சிவப்பு நிறத்தில் சேலை அணிந்து செம்ம க்யூட்டா புகைப்படத்தை வெளியிட்டாங்க.. அடுத்தடுத்து வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட... இவ்வளவு அழகா... என்ன தேவதையா இப்படி நடந்து வர்றாங்களேன்னு ஆச்சரியப்பட்டு கமெண்ட் செய்தார்கள்.
மாமியார் வீட்டு விசேஷம், பத்திரிகையாளர் சந்திப்பு, கேரளா கோவில் தரிசனம் என அடுத்தடுத்து புகைப்படங்களில் கன்னங்கள் பூசி, கல்யாண பூரிப்பில் அழகில் மிளிரும் நயன்தாராவைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
???? #WikkiNayan pic.twitter.com/eoeKfyIn3z
— Nayanthara✨ (@NayantharaU) June 13, 2022