என் காதல் எல்லாம் அவர் தான் - நயன்தாரா உருக்கம்!
Nayanthara
Tamil Cinema
Vignesh Shivan
By Sumathi
நயன்தாரா தனது கணவர் குறித்து நெகிழ்ச்சியாக செய்திகளை பகிர்ந்துள்ளார்.
நயன்தாரா நெகிழ்ச்சி
நயன்தாரா நடித்து அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள கனெக்ட் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், புரமோஷன் நேர்காணலில் நயன்தாரா கலந்துக் கொண்டார்.
அதில் காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், 'என்னுடைய காதலெல்லாம் என் கணவர்தான். எப்போது நாங்கள் காதலிக்கத் துவங்கினோமோ அப்போதிலிருந்து காதலுக்கான அர்த்தமாக அவர் இருக்கிறார்.
அவருடன் இருக்கும்போது எனக்கு எந்தக் கவலையும் இல்லை' என விக்னேஷ் சிவன் குறித்து நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.