தன் இரு மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் - வைரலாகும் வீடியோ...!

Nayanthara Christmas Viral Video Vignesh Shivan Festival
By Nandhini Dec 26, 2022 05:44 AM GMT
Report

தன் இரு மகன்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவனின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் 9-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் நடந்து 4 மாதமே ஆன நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில், நயன்தாராவும், நானும் அப்பா, அம்மா ஆகிவிட்டோம் என்று இரட்டை குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டார். இந்த விவகாரம் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்-விக்கி

இந்நிலையில்,நடிகை நயன்தாரா தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், நடிகை நயன்தாராவும், கணவர் விக்னேஷ் சிவனும் தன் இரு மகன்களுடன் மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இந்த வீடியோவைப் பார்த்த அவர்களது ரசிகர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

nayanthara-vignesh-shivan-christmas