Wednesday, Jun 4, 2025

உயிர் உலக்'குடன் முதல் ஓணம் கொண்டாடிய நயன் விக்கி தம்பதிகள்

Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Karthick 2 years ago
Report

கோலிவுட்டின் பிரபல தம்பதிகள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்கள் குழந்தைகளுடன் ஓணம் பண்டிகையை கொண்டாடியது தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா விக்னேஷ் சிவன்

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக திகழும் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்தது. உயிர் மற்றும் உலக் என பெயரிடப்பட்டடுள்ள தன் குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது தம்பதிகள் வெளியிட்டும் வருகின்றனர்.  

nayanthara-vignesh-shivan-celebrates-onam-with-kid

ஓணம் கொண்டாட்டம்

அந்த வகையில் இப்பொழுது தங்கள் குழந்தைகளுடன் தங்களது முதல் ஓணத்தைக் நயன் விக்கி தம்பதிகள் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, 'உயிர் உலகத்துடன் எங்களுடைய முதல் ஓணம்' என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்களை கண்டா ரசிகர்கள் நயன்தாராவின் குழந்தைகள் நன்கு வளர்ந்துவிட்டனவே என கமெண்ட் செய்து வருகின்றனர்.