‘இங்கு தான் தடை... அங்க இல்லை...’ - புத்தாண்டை கொண்டாட வெளிநாட்டுக்கு பறந்த விக்கி - நயன்
தமிழ் சினிமாத்துறையில் லவ் பேர்ட்ஸாக வலம் வரும் ஜோடிகள் யார் என்றால் அது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தான்.
விக்னேஷ் சிவனோ சமூகவலைத்தளங்களில் செம ஆக்டிவ்வாக இருப்பார். தனது படங்கள் குறித்த அப்டேட் மட்டுமல்லாமல் நயனின் அப்டேட்டையும் சேர்த்து விக்னேஷ் சிவன் வெளியிடுவார்.
சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து, தங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வைத்திருக்கு புதிய பிளான் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. தற்போது விக்கி மற்றும் நயன் துபாயில் முகாமிட்டிருக்கிறார்கள்.
வருகிற வெள்ளிக்கிழமை இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை துபாயில் கொண்டாட இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களது தயாரிப்பில் இறுதியாக வெளியான படம்தான் ராக்கி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதைத் தொடர்ந்து ‘கூழாங்கல்’ என்ற படம் வெளியாவதற்கு முன்னதாகவே பல விருதுகளை குவித்திருக்கிறது. நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தையும் ரௌடி பிக்சர்ஸ் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.