ஏதாவது பரிகாரமா..? - பாடிகாட் முனீஸ்வரர் கோவிலுக்கு நயன்-விக்னேஷ் திடீர் விசிட் - வைரலாகும் போட்டோ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.
நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளனர்.
ரசிகர்கள் எப்போது உங்கள் திருமணம் என்று கேள்வி கேட்டுக்கொண்டும் வருகிறார்கள். பல கோவில்களுக்கு அவ்வப்போது இந்த காதல் ஜோடி செல்வது வழக்கம். இதனையடுத்து, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தற்போது பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்குச் சென்றுள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் இவர்கள் திருமணத்தில் ஏதாவது பிரச்சினையா? ஏதாவது பரிகாரம் செய்யப்போகிறார்களா? என்று சந்தேகத்தோடு கேள்வி எழுப்பினர்.
ஆனால், அதெல்லாம் ஒன்றும் இல்லையாம்.
அவர்கள் வாங்கியுள்ள புதிய இன்னோவா காருக்கு பூஜை போடுவதற்காக பாடிகாட் முனீஸ்வரன் கோவில் இவர்கள் சென்றுள்ளனராம். அதற்காக பூஜைப் போடுவதற்காக அங்கு சென்றுள்ளனராம்.