2வது தேனிலவு இருக்கு... - நயனுக்கு சூசகமாக வாக்கு கொடுத்த விக்னேஷ்... - வைரலாகும் புகைப்படம்

Nayanthara Vignesh Shivan
1 மாதம் முன்

கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

நயன்தாரா - விக்னேஷ் திருமணம்

7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.

nayanthara

மறுவீடு சென்ற விக்னேஷ்

திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் - நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

ஹனிமூன்

திருமணம் முடிந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்காக சென்று இருந்தனர். அங்கு உற்சாகமாக தங்கள் தேனிலவை கொண்டாடி வந்தனர். தங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்த விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வந்தனர்.

இந்தியா திரும்பினர்

தாய்லாந்து நாட்டிலிருந்து ஹனிமூன் முடிந்து நேற்று முன்தினம் இந்தியா திரும்பிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி வீட்டிற்கு கூட போகமால் மும்பை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அதில் கலந்துகொள்வதற்காக நயன்தாரா அங்கு சென்றுள்ளார்.

nayanthara

மீண்டும் ஹனிமூன்

தாய்லாந்திலிருந்து கிளம்பும் முன்பு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, தி சயாம் ஹோட்டலுக்கு நன்றி. இந்த சூழல் மற்றும் அருமையான உணவுக்காகவே திரும்பி வருவோம் என்றார். ஹோட்டலுக்கு விக்னேஷ் சிவன் அளித்த வாக்குறுதியை பார்த்தால் 2வது ஹனிமூன் இருக்கிறது போல விக்கி சூசகமாக சொல்கிறாரோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.    


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.