திருப்பதியில் செருப்புடன் போட்டோ ஷூட் நடத்திய சர்ச்சை - நயன்- விக்கிக்கு நோட்டீஸ் - தேவஸ்தானம் அதிரடி
கடந்த 9ம் தேதி நயன்தாரா - விக்னேஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.
நயன்தாரா - விக்னேஷ்
திருமணம் 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இன்று தங்களது கணவன், மனைவி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்திருக்கிறார்கள். இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. நேற்று காலை நடிகர் ரஜினிகாந்த் தாலியை எடுத்து விக்னேஷ் சிவன் கையில் கொடுக்க, 8:30 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார்.
பிரபலங்கள் பங்கேற்பு
இத்திருமணத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், அஜித், கலா மாஸ்டர், விஜய்சேதுபதி, நெல்சன், அனிருத், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உள்ளனர். திருமணத்தில் செல்போன்களுக்கு அனுமதியில்லை என பல்வேறு பலத்த கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
புகைப்படங்கள் வைரல்
திருமணத்தின் புகைப்படங்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் இணையத்தை சுற்றி வலம் வந்தது. ரசிகர்கள் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு டுவிட்டர், இன்ஸ்டா, தனது செல்போனில் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செருப்பு அணிந்த சர்ச்சை
திருமணம் முடிந்து மறுநாள் (10ம் தேதி) திருப்பதியில் நயன்தாரா மஞ்சள் நிற புடவையிலும், விக்னேஷ்சிவன் பட்டு வேஷ்டி, பட்டுசட்டையிலும் கோவிலுக்கு சென்றனர். திருப்பதியில் இவர்கள் வந்த வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. திருப்பதிக்கு வந்திருந்த பக்தர்களில் சிலர் இந்த தம்பதியினரை பார்க்க குவிந்ததால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, திருப்பதி மாட வீதிகளில் இந்த ஜோடி போட்டோஷூட் நடத்தினர். அப்போது புகைப்படக்காரர்கள், நயன்தாரா, விக்னேஷ் சிவன் செருப்பு கால்களுடன் சென்றது சர்ச்சையை கிளப்பியது. பலரும் இது தொடர்பான கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய தொடங்கினர்.
மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்
கடந்த 30 நாட்களில் கிட்டத்தட்ட 5 முறை திருப்பதிக்கு சென்று திருமணத்தை அங்கே நடத்த முயற்சித்தோம் மேலும் தாங்கள் நேசிக்கும் இறைவனுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை. இதனால் புண்படுத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என விக்னேஷ் சிவன் கூறினார்.
தேவஸ்தான அதிகாரிகள்
இந்நிலையில், இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் பேசுகையில், ''முக்கிய பிரமுகர்கள் மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும். தேவஸ்தானம் சார்பில் நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர் அளிக்கும் பதிலை வைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.