கோலாகலமாக களைக்கட்டப்போகும் நயன்-விக்கி திருமண நிகழ்ச்சி - லீக்கான கல்யாண பத்திரிக்கை - எந்த இடத்தில் தெரியுமா?

Nayanthara Vignesh Shivan
By Nandhini May 28, 2022 07:10 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ள நடிகை நயன்தாராவும்,இயக்குநர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர். நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் அண்மையில் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. நடிகை நயன்தாரா கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பபேஷ்வரர் ஆலயத்தில் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.

சாமி தரிசனம் முடிந்தவுடன் மங்களம் யானையிடம் வாழைப்பழம் கொடுத்து ஆசி பெற்றார். இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த பத்திரிக்கையில், அவர்களது திருமணம் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி நடக்க உள்ளதாகவும், மேலும், அவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளதாகவும் அந்த பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், திருமணத்தை கோலாகலமாக நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், இவர்களின் திருமண விழாவில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல சினிமா நட்சத்திரங்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், இயக்குனர்கள் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

கோலாகலமாக களைக்கட்டப்போகும் நயன்-விக்கி திருமண நிகழ்ச்சி - லீக்கான கல்யாண பத்திரிக்கை - எந்த இடத்தில் தெரியுமா? | Nayanthara Vignesh Shivan

கோலாகலமாக களைக்கட்டப்போகும் நயன்-விக்கி திருமண நிகழ்ச்சி - லீக்கான கல்யாண பத்திரிக்கை - எந்த இடத்தில் தெரியுமா? | Nayanthara Vignesh Shivan