நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் பிரேக்கப்? - விக்னேஷ் சிவன் பதில்!
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டதாகபேச்சப்பட்ட நிலையில் அவர்கள் ஜோடியாக தனி விமானம் மூலம் கொச்சிக்கு சென்றதை பார்த்த ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம்.
இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகி தீயாக பரவியது. இந்நிலையில் தான் நெற்றிக்கண் திரைப்படத்தை பற்றி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் விக்னேஷ் சிவன்.
அதை பார்த்தவர்களோ, நெற்றிக்கண் படத்தை தயாரித்திருப்பதால் போஸ்ட் போட்டிருக்கிறார் என்றும் கருத்து தெரிவித்தார்கள்.
இப்படி பேசும்போது தான், நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் கொச்சிக்கு சென்றிருக்கிறார்கள்.
நயன்தாரா கையை பிடித்து விமானத்தில் இருந்து இறக்கிவிட்டார் விக்னேஷ் சிவன். மேலும் அவர்கள் கைகோர்த்து நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்த பிறகே ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.