ஜவான் படம்....நம்பவைத்து ஏமாற்றிய அட்லீ...வருத்தத்தில் நயன்?

Nayanthara Shah Rukh Khan Atlee Kumar Jawan
By Karthick Aug 24, 2023 02:30 PM GMT
Report

ஜவான் படத்தை பார்த்தபிறகு நடிகை நயன்தாரா வருத்தத்தில் இருப்பதில் கோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.  

ஜவான் 

பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான். வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்காக ப்ரோமோஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளன.

nayanthara-upset-over-jawaan-and-atlee

பான் இந்தியன் படமான இதில் நயன்தாரா நாயகியாகவும், வில்லனாக விஜய் சேதுபதியும், சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில், படத்திற்காக சென்னையில் தனியாக நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.   

ஏமாற்றத்தில் நயன் 

இந்நிலையில், இந்த படத்தை எடிட் செய்து முடித்தவுடன் பார்த்துள்ள நடிகை நயன்தாரா பெரிய வருத்தத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. இந்த படத்தின் மூலம் பாலிவுட்தில் அறிமுகமாகும் நயன்தாரா, அங்கேயும் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினை இந்த படம் உருவாக்கி தரும் என எதிர்பார்த்திருக்கிறார்.

ஆனால், படத்தில் நயன்தாராவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிலையில், அவை அனைத்துமே எடிட்டிங்கில் நீக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாரா ஏமாற்றமடைந்துள்ளதாக தற்போது பேசப்பட்டு வருகின்றது.