நயன்தாராவுக்கும், உதயநிதிக்கும் உறவுன்னா? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ராதாரவி
பாஜக-வில் நட்சத்திர பேச்சாளராக வலம்வந்து கொண்டிருக்கும் நடிகர் ராதாரவி, நயன்தாராவையும், உதயநிதியையும் ஒப்பிட்டு பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே நயன்தாரா பற்றி ஆபாசமாக பேசியதற்காக திமுக-விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த ராதாரவி, பாஜக வில் இணைந்தார்.
தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்காக பரப்புரை மேற்கொண்டு வரும் ராதாரவி, மீண்டும் நயன்தாரா குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ஒன்னுமில்ல, நயன்தாரானு ஒரு நடிகை இருக்கு இல்ல, நான் அதைப் பற்றி பேசவே இல்லை. ஆனால், பத்திரிகையில் போட்டு பெருசாக்கி மாற்றிவிட்டுவிட்டார்கள்… நான்தான் பேசுனேன்… நான்தான் பேசுனேன்…
சரி பேசினேன் வெச்சுக்கடா போடானு சொல்லிட்டேன்… உடனே, துடிக்கிறானுங்க திமுக-ல, பெண்களைப் பற்றி இழிவாக பேசினார் ராதாரவி, அதனால், அவரை கட்சியைவிட்டு தற்காலிகமாக நீக்குறோம். நான் சொன்னேன். ஏண்டா தற்காலிகமாக, நான் பெர்மனண்ட்டாக வெளியே வந்துடறேன் என்று சொல்லிவிட்டு நான்தான் வந்தேன்.
சன் டிவியிலும் இந்த நியூஸ் வந்தது. ஏனென்றால், நான்தான் பேட்டி கொடுத்தேன். எதுக்கு நான் சொல்றேனா, நயன்தாரா யார்ரா உங்க கட்சி கொள்கை பரப்பு செயலாளரா சொல்லு… என்ன ஒறவு உனக்கு? சரி உதயநிதிக்கு அதுக்கும் ஒறவுனா நான் என்ன செய்றது?” என பேசியுள்ளார். இந்த வீடியோவால் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது.