ஸ்பெயினில் ஊர் சுற்றும் நயன்தாரா - விக்னேஷ் சிவன்.. வைரலாகும் புகைப்படம்

Nayanthara Spain Vignesh Shivan
By Thahir Aug 14, 2022 12:22 PM GMT
Report

ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நயன்தாரா விக்னேஷ் சிவன் பேருந்து மற்றும் தெருக்களில் நடந்து செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அறிமுகம்

2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா.

அதை தொடர்ந்து சந்திரமுகி, சிவகாசி, கஜினி, கள்வனின் காதலி, வல்லவன், தலைமகன், ஈ, சிவாஜி, பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார்.  

Nayanthara

காதல் திருமணம்

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

Nayanthara Marriage

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா கடந்த ஜுன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

ஹனிமூன்

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து நாட்டிற்கு தேனிலவுக்காக சென்றனர். பின்பு அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினார் விக்னேஷ் சிவன்.

Nayanthara Vignesh Shivan

பின்னர் இந்தியா திரும்பிய இருவரும் திரைப்பட வேலைகளில் பிசியாகின. நயன்தாரா ஜவான் திரைப்பட படப்பிடிப்புக்காக மும்பை சென்ற நிலையில் சென்னை திரும்பினார்.

செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்ச்சி 

திருமணத்திற்கு பின்பு, நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இதனிடையே விக்னேஷ் சிவனுக்கு, சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் தொடக்க விழாவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக அமைந்ததால், ரஜினி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.  

விக்னேஷை பாராட்டிய நயன்தாரா

இந்த தொடக்க விழாவில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வந்ததன் காரணமாக நயன்தாரா பங்கேற்கவில்லை, இருந்த போதும் நேரலையில் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நயன்தாரா தனக்கு மெசேஜ் அனுப்பியதாக தெரிவித்தார்.

Nayanthara

அவர் அனுப்பிய மெசேஜில் வாவ்..செம Grand, Extraordinary Wikky கலக்கிட்டனு பாராட்டியதாக கூறினார். நயன்தாராவே விக்னேஷ் சிவனை வாழ்த்தியதால் விக்னேஷ் சிவன் அளவற்ற சந்தோஷத்தில் அப்பொழுது இருந்ததாகவும் கூறியிருந்தார். 

ஊர் சுற்றும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் 

திருமணம் முடிந்த பிறகு ஒரு சில தினங்களுக்கு முன்னாள் நயன்தாரா விக்னேஷ் சிவன் இரண்டாவது முறையாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

Nayanthara

முதல் முறையாக தாய்லாந்து நாட்டிற்கு சென்ற போது தங்கள் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

Nayanthara

அதே போல் இந்த முறையும் விக்னேஷ் ஸ்பெயின் நாட்டில் ஹோட்டல், பேருந்து மற்றும் தெருக்களில் நடந்து செல்லும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.