நயன்தாராவுக்கு அடித்த அதிஷ்டம் : நீண்ட வருடமாக முடங்கிக்கிடந்த படம் ரிலீஸ்
பல்வேறு காரணங்களால் முடங்கிக் கிடந்த நயன்தாரா படம், தற்போது ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, கடந்த 2012ம் ஆண்டு தெலுங்கில் கோபிசந்துக்கு ஜோடியாக ‘ஆறடுகுலா புல்லட்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
சுமார் ஐந்து வருடங்களாகத் தயாரிப்பில் இருந்த இப்படத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு சென்சார் சான்றிதழ் கிடைத்தது. ஆனாலும் படம் ரிலீஸ் ஆகவில்லை.
இந்நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதால், படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்த பின் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிக்கப்பட்டுள்ளது.