ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாரா... - வைரலாகும் வீடியோ...!

Nayanthara Shah Rukh Khan
By Nandhini Feb 13, 2023 08:31 AM GMT
Report

நடிகர் ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்து வழியனுப்பிய நயன்தாராவின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘பதான்’ படம்

பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பதான்’. மிகுந்த எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் கடந்த ஜனவரி 25ம் தேதி ‘பதான்’ படம் இந்தியாவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட திரைகளிலும், வெளிநாடுகளில் 2500-க்கு மேற்பட்ட திரைகளிலும் வெளியானது.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் கூட ஷாருக்கின் பதான் நிரம்பிய திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் நெகிழ்ந்து போன பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பதான் மீது பாராட்டு மழை பொழிந்தார். தற்போது உலக அளவில் 700 கோடி ரூபாய்க்கு மேல் ‘பதான்’ படம் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

nayanthara-shah-rukh-khan-viral-video-kissing

நயன்தாரா கன்னத்தில் முத்தமிட்ட ஷாரூக்கான்

நடிகர் ஷாருக்கான் தற்போது ‘ஜவான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 'பதான்' குறித்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் ஷாருக்கான் மும்பையிலிருந்து நேற்று சென்னை வந்துள்ளார். சென்னை வந்த அவர், நயன்தாராவின் இல்லத்திற்கு சென்றார். ஷாருக்கான் வருவதை அறிந்த, ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டியடித்தனர்.

இதனால், நயன்தாரா இல்ல குடியிருப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நயன்தாராவை சந்தித்த நடிகர் ஷாருக்கான் சிறிது நேரத்தில், அவருடன் பேசிவிட்டு, விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதிகளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளையும் பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்.

தன் வீட்டிலிருந்து கிளம்பிய நடிகர் ஷாருக்கானை, நயன்தாரா அவரது கார் வரை சென்று வழியனுப்ப வந்தார். அப்போது, ஷாருக்கான் காரில் ஏறுவதற்கு முன் நயன்தாராவின் கன்னத்தில் முத்தமிட்டார். இதன் பிறகு, ஷாருக்கான் அங்கிருந்த எல்லோருக்கும் பறக்கும்முத்தம் கொடுத்து விட்டு கிளம்பினார்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.