விக்னேஷ் நீ இப்படி செய்வனு நினைக்கல - மெசேஜ் அனுப்பிய நயன்தாரா..!

Nayanthara Vignesh Shivan 44th Chess Olympiad
By Thahir Aug 09, 2022 03:40 AM GMT
Report

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா குறித்து மனைவியும், நடிகையுமான நயன்தாரா அனுப்பிய மேசேஜ் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அறிமுகம் 

2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நயன்தாரா. அதை தொடர்ந்து சந்திரமுகி,சிவகாசி,கஜினி,கள்வனின் காதலி,வல்லவன்,தலைமகன்,ஈ,சிவாஜி,பில்லா உள்ளிட்ட புகைப்படங்களில் நடித்தார். 

விக்னேஷ் நீ இப்படி செய்வனு நினைக்கல - மெசேஜ் அனுப்பிய நயன்தாரா..! | Nayanthara Sent A Message To Vignesh Shivan

காதல் திருமணம் 

இந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

Nayanthara Marriage

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த ஜுன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். 

துவக்க விழாவை இயக்கிய விக்னேஷ் 

திருமணத்திற்கு பின்பு, நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.

இதனிடையே விக்னேஷ் சிவனுக்கு, சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் தொடக்க விழாவை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

44th chess Olympiad

இந்நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக அமைந்ததால், ரஜினி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

விக்னேஷை பாராட்டிய நயன்தாரா

இந்த தொடக்க விழாவில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்து வந்ததன் காரணமாக நயன்தாரா பங்கேற்கவில்லை, இருந்த போதும் நேரலையில் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு நயன்தாரா தனக்கு மெசேஜ் அனுப்பியதாக தெரிவித்தார்.

Nayanthara

அவர் அனுப்பிய மெசேஜில் வாவ்..செம Grand, Extraordinary Wikky கலக்கிட்டனு பாராட்டியதாக கூறினார். நயன்தாராவே விக்னேஷ் சிவனை வாழ்த்தியதால் விக்னேஷ் சிவன் அளவற்ற சந்தோஷத்தில் அப்பொழுது இருந்ததாகவும் கூறியுள்ளார்.