திருமணத்திற்கு முன் லிவ்விங் - விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா சொன்ன வார்த்தை!
தமிழ் சினிமாவில்நட்சத்திர ஜோடியாக வலம் வரும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் படப்பிடிப்பின் போது சண்டையிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடி தான் திரைப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்தபோது தான் இவர்களுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.படப்பிடிப்பின் போது இருவரும் ரகசியமாக காதலித்து வந்துள்ளனர்.
பின்னர் இருவரது காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை தொடர்ந்து விருது விழாக்கள் மற்றும் பட விழாக்களில் விக்கி - நயன் ஜோடி ஜோடியாக கலந்துகொள்ள தொடங்கினர். இப்படி காதல் புறாக்களாக வலம் வரும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் படப்பிடிப்பின் போது சண்டையிட்ட சம்பவம் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகிறது.