அடேங்கப்பா... வெளியான முதல் நாளே இவ்வளவு வசூலா? - இதோ வெளியான தகவல்

Vijay Sethupathi Nayanthara Samantha
By Nandhini Apr 29, 2022 06:17 AM GMT
Report

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இப்படத்தில், கதிஜாவாக சமந்தாவும், கண்மணியாக நயன்தாராவும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இவர்கள் இருவரையும் காதலிப்பவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். 

படம் நேற்று வெளியானதையடுத்து நயன்தாரா, தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

அந்த பதிவில், திருப்பதியிலிருந்து அதிகாலை 2.22 மணிக்கு ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ இன்றிலிருந்து உங்களுடையது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர்களின் இருவரின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது. 

இந்நிலையில், இப்படம் நல்ல வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. வெளியான முதல் நாளில் சென்னை பாக்ஸ் ஆபிஸில், சென்னையில் மட்டும் ரூ. 66 லட்சம் வசூலை  ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ படம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துள்ளனர்.