நடிகை நயன்தாராவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? - வாய் பிளக்கும் ரசிகர்கள்!
நடிகை நயன்தாரா தான் நடிக்கும் திரைப்படங்களின் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.
இவர் தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகிறார். தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடிதெ்து வருகிறார். லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் இவர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க இதுவரை ரூ.10 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிதாக நடிக்க இருக்கும் படங்களுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசி வருவதாக கூறப்படுகிறது.
நடிகை நயன்தாரா திடீர் என்று தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதால் தயாரிப்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.