அட்ஜெஸ்மெண்ட் செய்தால் படவாய்ப்பு - அனுபவம் பகிர்ந்த நயன்தாரா

Nayanthara Tamil Cinema
By Sumathi 2 மாதங்கள் முன்
Report

நயன்தாரா சினிமாவில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். தொடர்ந்து இரட்டை ஆண் குழந்தைகளையும் வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்டனர்.

அட்ஜெஸ்மெண்ட் செய்தால் படவாய்ப்பு - அனுபவம் பகிர்ந்த நயன்தாரா | Nayanthara Reveals She Also Faced Casting Couch

தொடர்ந்து இருவரும் திருமணத்திற்கு பின்பும் சினிமாவில் கவனம் செலுத்து வருகின்றனர். ஆனால், தற்போது நயன்தாரா தன் குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பதற்காக சிறிது சினிமாவில் பிரேக் எடுத்துள்ளார். விரைவில் ஜவான் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

சினிமா அனுபவம்

மேலும், ஜெயம் ரவி ஜோடியாக நடித்துள்ள இறைவன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், திரையுலகில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், அட்ஜஸ்மெண்ட் செய்தால் படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க வாய்ப்பு தருவதாக தன்னிடம் கூறியதாகவும்,

அப்படி ஒரு வாய்ப்பே வேண்டாம் என நிராகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தனது நடிப்பு திறமையின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.