சிவி சண்முகம் அநாகரீக பேச்சு: பதிலடி கொடுத்த நயன்தாரா
அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நயன்தாரா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் களைகட்டியுள்ளது.
ஒருசில தினங்களில் வேட்பாளர்கள் அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல், சூறாவளி பிரசாரம் என தமிழகமே அதிரும்.

இந்நிலையில் விழுப்புரத்தில் NDA கூட்டணி கட்சிகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை நயன்தாராவை குறிப்பிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியது சர்ச்சையானது.
அதாவது, உங்கள் கனவை சொல்லுங்கள் என கேட்கிறார்கள், எனக்கு நயன்தாரா வேண்டும் கொடுப்பார்களா என அநாகரிகமாக பேசினார்.
இவரது பேச்சுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் சூழலில், அமைதியாக பதிலடி கொடுத்துள்ளார் நயன்தாரா.

அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "மழை எங்கு, யார் மீது விழுகிறோம் என்று பார்ப்பதில்லை. அதுபோல் உங்கள் அன்பு இருக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.
தன்னைப் பற்றி யார் என்ன பேசினாலும் அன்புடன் இருப்போம் என்பதை வலியுறுத்துவதாக சொல்கிறார்கள் நயன்தாராவின் ரசிகர்கள்.
