அப்படி நடிச்சிருக்கவே கூடாது - நயனை இப்பவும் வருத்தப்பட வெச்ச படம்..!

Suriya Nayanthara
By Karthick Jan 08, 2024 08:40 AM GMT
Report

 நயன்தாரா நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த அன்னபூரணி படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது குறிப்பிடதக்கது.

நயன்தாரா

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகி என்பதை தாண்டி ஹிந்தியில் தற்போது கவனமீர்த்துள்ளார் நயன்தாரா. ஜவான் படம் மாபெரும் வெற்றியை பெற தற்போது அடுத்தடுத்த நல்ல பாலிவுட் கதைகளுக்காக நயன்தாரா காத்துள்ளார்.

nayanthara-regrets-acting-in-a-movie-till-now

அதே நேரத்தில், அவர் தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அன்னபூரணி படம் வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர், மண்ணாங்கட்டி, டெஸ்ட் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

அந்த படம்...

இந்நிலையில், தான் அறிமுகமான காலகட்டத்தில் படம் ஒன்றில் நடித்ததற்கு தான் நயன்தாரா இன்றளவும் வருத்தம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் நடிப்பில் வெளியான "கஜினி" படமே அது.

nayanthara-regrets-acting-in-a-movie-till-now

அந்த படத்தின் இரண்டாவது நாயகியான நயன்தாராவிற்கு தொடர்ந்து அது போன்ற கதாபாத்திரங்களே வந்துள்ளது. ஆனால், அவற்றை தவிர்த்த நயன் கதாநாயகியாக அதனை தொடர்ந்து நடித்த வல்லவன், ஏகன், சந்திரமுகி என படங்கள் அமைய தனது பாதையை சரியாக வகுத்து கொண்டார் நயன்தாரா.