விக்னேஷ் சிவனுடன் விவகாரத்தா? நயன்தாரா சொன்ன பதில்
விக்னேஷ் சிவனுடன் விவகாரத்து என வெளியான தகவலுக்கு நயன்தாரா விளக்கமளித்துள்ளார்.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் என இரு குழந்தைகள் உண்டு.
நயன்தாரா விக்னேஷ் சிவன்
இந்நிலையில் நயன்தாரா, கணவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், இதன் காரணமாக இருவரும் விவாகரத்து செய்ய போவதாகவும், சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதற்கு விளக்கமளிக்கும் வகையில், விக்னேஷ் சிவன் உடன் எடுத்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "எங்களை பற்றி வரும் வதந்திகளுக்கு ரியாக்ஷன் இதுதான்" என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.