காதல் முறிந்து பல ஆண்டுகளுக்கு பிரபுதேவாவுடன் இணையும் நயன்தாரா - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள்

Prabhu Deva Nayanthara
By Nandhini May 06, 2022 07:33 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.

சமீபத்தில் விஜய் டிவியில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளர் டிடிக்கு அளித்த பேட்டியில், நடிகை நயன்தாரா, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூறினார்.

விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ‘காத்துவாக்கு ரெண்டு காதல்’ படம் கடந்த 28ம் தேதி வெளியானது. இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வரும் ஜூன் மாதம் இவர்களது திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால், எந்த தேதியில் நடைபெறும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இவர்களது திருமணம் கேரளா அல்லது வெளிநாட்டில் நடக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது காதல் முறிவுக்கு பின்னர் சிம்புவுடன் இணைந்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது தனது முன்னாள் காதலனனான பிரபுதேவாவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபுதேவாவும், நயன்தாராவும் சில ஆண்டுகள் ஜோடியாக சுற்றினர்.

திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவருக்குள்ளும் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்நிலையில், மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் தயாராகி வரும் படம் ‘காட்ஃபாதர்’. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக இப்படம் தயாராகி வருகிறது.

இதில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். நடிகை நயன்தாராவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். ஆனால், நயன்தாரா நடித்துள்ள இப்படத்தில் பிரபுதேவா நடனம் அமைத்த பாடலில் நயன் இடம்பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. 

காதல் முறிந்து பல ஆண்டுகளுக்கு பிரபுதேவாவுடன் இணையும் நயன்தாரா - வெளியான தகவல் - ஷாக்கான ரசிகர்கள் | Nayanthara Prabhu Deva