அடேங்கப்பா.. போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய வீடு - வைரல் ஃபோட்டோ

Sumathi
in பிரபலங்கள்Report this article
போயஸ் தோட்டத்தில் நயன்தாரா வாங்கிய வீட்டின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
நயன்-விக்கி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதை தொடர்ந்து இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது.
உயிர் ருத்ரோநீல் - உலக் தெய்வக் என பெயரிட்டனர். இருவரும் தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இது ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகும்.
போயஸ் கார்டன்
இதன் மூலம் தொடர்ந்து ஹாட் டாப்பிக்கில் இருந்து வருகின்றனர். சமீபத்தில் திருப்பதிக்கு இருவரும் சென்ற வீடியோ வெளியாகி அதுகம் பகிரப்பட்டது. இந்நிலையில், நடிகை நயன்தாரா சில மாதங்களுக்கு முன்பு சென்னை போயஸ் கார்டனில் 4 மாடி கொண்டு குடியிருப்பை வாங்கியதாக கூறப்பட்டது.
இதுவரை அந்த வீட்டில் நயன்தாரா குடியேறவில்லை என கூறப்படும் நிலையில் வீட்டின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது இந்த வீட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
பல பிரபலங்களின் வீடு போயஸ் கார்டனில் இருப்பது குறிப்பிடத்தக்கது.