OTT இல் வெளியாகும் நயன்தாராவின் நெற்றிக்கண்!

Nayanthara Netrikann DisneyPlusHotstarMultiplex
By Irumporai Jul 21, 2021 10:29 AM GMT
Report

இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் நெற்றிக்கண்இந்த படத்தினை அவள் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.

இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் 'நெற்றிக்கண்' திரைப்படத்தை வெளியிட முடியவில்லை.

இந்த நிலையில் ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பும், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நெற்றிக்கண் திரைப்படத்தை ஓ.டி.டி உரிமையை ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இதற்கான அறிவிப்பையும் அந்த நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் விரைவில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாக உள்ளது.