சர்வதேச பட விழாவுக்கு தேர்வான நயன்தாரா படம்

ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நயன்தாரா படம் தேர்வாகியுள்ளது. 

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

இவர்கள் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதுதவிர பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படமும் இந்த பட்டியலில் உள்ளது. 

இப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது. இந்நிலையில், சீனாவில் நடைபெற உள்ள ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ‘கூழாங்கல்’ திரைப்படம் தேர்வாகி உள்ளது.

நாளை தொடங்க உள்ள இவ்விழா, ஜூன் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏற்கனவே, நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்