நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் - மருத்துவர்கள் எச்சரிக்கை

Nayanthara Tamil Cinema Vignesh Shivan Marriage
By Thahir 2 மாதங்கள் முன்
205 Shares

நயன்தாராவுக்கு 40 வயது நெருங்கும் நிலையில் அவர் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

காதல் திருமணம் 

பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் இணைந்து பணியாற்றியதில் இருந்து காதலித்து வந்தனர்.

நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் - மருத்துவர்கள் எச்சரிக்கை | Nayanthara Is Having Trouble Conceiving A Child

7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்,நயன்தாரா கடந்த ஜுன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

மருத்துவர்கள் எச்சரிக்கை 

இந்த நிலையில் நடிகை நயன்தாரா சினிமாவில் கவனம் செலுத்திய பின் சில வருடங்கள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியானது.

வயது அதிகமாக உள்ளதால் வரும் காலங்களில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிவிடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நயன்தாராவுக்கு வயது அதிகமாகிவிட்டதால் இனியும் தாமதப்படுத்தி கொள்ளாமல் குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

நடிகை நயன்தாரா குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் - மருத்துவர்கள் எச்சரிக்கை | Nayanthara Is Having Trouble Conceiving A Child

நயன்தாராவுக்கு வயது அதிகமாக இருப்பதால் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் ஆனால் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்தால் குழந்தை பெற்று கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து புதிய படங்களில் கமிட் ஆகாமல் இருக்கும் நயன்தாரா ஏற்கனவே கையில் இருக்கும் புகைப்படங்களை நடித்து விட்டு முற்றிலும் திரையுலகை விட்டு விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இருக்கும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இந்தியா திரும்பிய உடன் ஒரு மாதத்தில் கையில் இருக்கும் திரைப்படத்தை முடித்து கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.