1 ரூபாய் செலவில்லாமல் ஹனிமூன் சென்ற நயன்தாரா, விக்னேஷ் சிவன்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.
திருமணம்
7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமண வீடியோவை ஒளிப்பரப்பும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றது.
இதையடுத்து நயன்தாரா, விக்னேஷ் சிவனின் திருமண செலவு முழுவதையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெனியானது.
திருமணம் முடிந்து முதல் முறை தேனிலவுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்று திரும்பினர்.
ஒரு ரூபாய் கூட செலவு இல்லை
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள இவர்களின் முழு செலவையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது.
இதனால் திருமணம் போலவே தேனிலவு செலவு அனைத்தையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் போட்டோகிராபர் ஒருவரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் சென்றுள்ளதாகவும் அவர் தான் விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாராவின் திருமண வீடியோவில் தேனிலவு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.