ரகசிய திருமண உண்மையை கூறி ஷாக் கொடுத்த நயன்தாரா விக்னேஷ் சிவன் : வாடகைத்தாய் விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Nayanthara Vignesh Shivan
By Irumporai Oct 16, 2022 02:54 AM GMT
Report

நயன்தாரா,விக்னேஷ் சிவன் இருவரும், தங்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பே பதிவு திருமணம் நடந்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

வாடகை தாய் மூலம் குழந்தை

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் பரவியது.

இது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாடகைத் தாய் மூலம் நினைத்ததும் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உண்டு எனவும் சம்மந்தப்பட்ட மருத்துவமனை  மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ரகசிய திருமண உண்மையை கூறி ஷாக் கொடுத்த நயன்தாரா விக்னேஷ் சிவன் : வாடகைத்தாய் விசாரணையில் அதிர்ச்சி தகவல்! | Nayanthara Got Married 6 Years

இந்த நிலையில் நயன் விக்கி தமபதிகளின் குழந்தை குறித்து  விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவ பணிகள் துறை இயக்குனருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

6 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம்

இந்த நிலையில் இரட்டை குழந்தை , விவாகரத்தில் விசாரணைக்குழுவிடம் ஆதாரங்களை நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சமர்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்துகொண்டதாக. கடந்த டிசம்பர் மாதமே வாடகைத்தாய்முறையில் குழந்தை பெற பதிவு செய்துவிட்டதாக அதில் கூறியுள்ளனர்.

ஆனால், ஜூன் மாதம் தான் வாடகைத்தாய் நெறிமுறை சட்டம் அமலுக்கு வந்தது என்றும் அது தங்களை கட்டுப்படுத்தாது என்றும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது.

ரகசிய திருமண உண்மையை கூறி ஷாக் கொடுத்த நயன்தாரா விக்னேஷ் சிவன் : வாடகைத்தாய் விசாரணையில் அதிர்ச்சி தகவல்! | Nayanthara Got Married 6 Years

இருவர்கள் பெற்றோர் ஆனதாக கூறிய அதிர்ச்சியில் இருந்தே இன்னும் சில ரசிகர்கள் மீளாத நிலையில், 6 வருடத்திற்கு முன்பே திருமணம் நடந்ததாகவும் அதிர்ச்சி கொடுத்துள்ளனர் நயன்  விக்கி தம்பதியினர்.