என்ன சொல்றீங்க... நயன்தாராவுக்கே இப்படியா? - ஆச்சரியத்தில் திரையுலகம்

chiranjeevi nayanthara lucifer mohanraja
By Petchi Avudaiappan Nov 21, 2021 04:24 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு நடிகை நயன்தாரா வாங்கியிருக்கும் சம்பளம் பற்றி கன்னட திரையுலகமே ஆச்சரியப்பட்டுள்ளது.

மலையாளத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான லூசிஃபர் படத்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் இயக்குநர் மோகன்ராஜா ரீமேக் செய்து வருகிறார்.  இந்த படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவுக்கு ஜோடியாக சத்யதேவ் நடிக்கிறார்.

ஆனால் அதிகம் பிரபலமில்லாத சத்யதேவுக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்று நயன்தாரா கூறியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் லூசிஃபர் ரீமேக்கிற்காக நயன்தாரா ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. 

மேலும் தெலுங்கு திரையுலகில் ஒரு நடிகைக்கு ரூ. 4 கோடி கொடுத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று சிரஞ்சீவி சொன்னதால் மோகன்ராஜா நயன்தாராவை ஒப்பந்தம் செய்தாராம்.

ஏற்கனவே சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நயன்தாரா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.