கொடுப்பது யாருக்கும் தெரிய கூடாது..! தலையில் தொப்பி அணிந்து கொண்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா
சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் புத்தாண்டு பரிசு கொடுத்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
காதல் திருமணம் - சர்ச்சை
நீண்ட நாட்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 9-ம் தேதி பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்து 4-வது மாதத்திலேயே தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்த நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. குழந்தை பெற்ற விவகாரத்தில் வாடகை தாய் சட்டத்தில் விதிமீறல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து தமிழக அரசு தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்டத்தின்படி தான் குழந்தை பெற்றதாக அரசு தெரிவித்தது.
திருமணம் ஆனதற்கு பின் முதல் புத்தாண்டை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி இந்தாண்டு கொண்டாடினர்.
சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு புத்தாண்டு பரிசு
அது மட்டுமல்லாமல் இரட்டை குழந்தைகள் வந்த பின் கொண்டாடும் முதல் புத்தாண்டு இது தான். இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி புத்தாண்டு பரிசுகளை வழங்கியது.
அப்போது நயன்தாரா தலையில் தொப்பி அணிந்து கொண்டு பரிசுகளை கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Sharing New Year Gifts To This Lovely People's ?#Nayanthara #VigneshShivan pic.twitter.com/6iWLCJ5azn
— NAYANTHARA FC KERALA (@NayantharaFCK) January 3, 2023