நயன்தாரா மேல விக்னேஷ் சிவனுக்கு இவ்வளவு தான் லவ்வா? - ரசிகர்கள் அதிர்ச்சி

nayanthara vigneshshivan
By Petchi Avudaiappan Oct 21, 2021 11:17 PM GMT
Report

நானும் ரௌடி தான் படம் ரிலீஸாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவு கூரும் வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நானும் ரௌடி தான் படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆகின. 

இவற்றையெல்லாம் தாண்டி அந்த படத்தில் நடித்தபோது தான் விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.அந்த காதல் இத்தனை ஆண்டுகளாக ஸ்டிராங்காக இருக்கிறது. இந்நிலையில் நானும் ரௌடி தான் 6 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி விஜய் சேதுபதி போட்ட ட்வீட்டுக்கு விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்திருந்தார் .

மேலும் விஜய் சேதுபதி வெளியிட்ட போஸ்டரையே இன்ஸ்டா ஸ்டோரியிலும் அவர் வெளியிட்டிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தலைவி கிடைச்சும் இவ்வளவு தான் ரியாக்ஷனா? இது நானும் ரௌடி தானுக்கு மட்டும் அல்ல உங்கள் இருவருக்கும் ஸ்பெஷலான நாள். தலைவிக்காக ஏதாவது சிறப்பாக வீடியோ வெளியிடுவீர்கள் என்று எதிர்பார்த்தால் இப்படி ஏமாற்றிவிட்டீர்களே  என கருத்து தெரிவித்துள்ளனர். 

You May Like This