ஓவராக போன ராகவா லாரன்ஸ்..! கும்பிடு போட்டு தப்பி ஓடி வந்த நயன்தாரா!!
லோகேஷ் கனகராஜின் கதையில் ராகவா லாரன்ஸ் - நயன்தாரா இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் படம் ஒன்று உருவாகி வருகின்றது.
ராகவா - நயன் படம்
தற்போதைய முக்கிய இயக்குனராக கருதப்படும் லோகேஷ் கனகராஜின் கதையில் ராகவா லாரன்ஸ் நாயகனாகவும், படத்தில் முக்கிய பாத்திரத்தில் நயன்தாரவும் நடிக்கும் படத்தை மேயாத மான், ஆடை, குளு குளு போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கி வருகின்றார்.
படத்தை லோகேஷ் கனகராஜே தயாரிக்க படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது ஜிகர்தண்டா டபிள் எக்ஸ் படத்தில் மும்முரமாக நடித்து வரும் லாரன்ஸ் மற்றும் மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வரும் நயன் இருவரும் இந்த படங்களின் ஷூட்டிங்கை முடித்த பிறகு இந்த படத்தில் இணைவார்கள் என கூறப்பட்டு வந்தது.
தப்பித்து வந்த நயன்
ஆனால், சமீபத்தில் வெளியான லாரன்ஸின் சந்திரமுகி 2 படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மிக பெரிய தோல்வி படமாக மாறியுள்ளது. படத்தின் மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவில் எழுந்துள்ள நிலையில், லாரன்ஸின் அடுத்த படமான "ஜிகர்தண்டா டபிள் எக்ஸ்" படத்தின் வணிகமும் இதனால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் காரணமாக தான் தற்போது, ரத்னகுமார் இயக்கவுள்ள படத்தில் இருந்து நயன்தாரா விலகியுள்ளார் என்று செய்திகள் பரவி வருகின்றன. நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான் படம் 1000 கோடி வசூலை தாண்டிய நிலையில், எதாவது சறுக்கலை சந்தித்து விட வேண்டாம் என்ற காரணத்தினால் அவர் முன்னதாகவே வெளியேறிவிட்டார் என கூறப்படுகிறது.